கும்பகோணம் என்கிற குடந்தை வளமுடைய சோழநாடான தஞ்சை மாவட்டத்தில் காவிரி அரசலாறுகளுக்கிடையில் அமைந்துள்ளது.
ஆரம்ப தீர்க்க ரேகையான கிரீன் விட்ச் மெரிடியனிலிருந்து 78.22°கிழக்கிலும், பூமத்திய ரேகையில் இருந்து 11°வடக்கிலும் அமைந்துள்ளது.சங்ககால புலவர்களால் சிறப்பாக பாராட்டபட்ட நகரம்.
கும்பகோணம் இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று, காரணம் ஆன்மிகம், கலை, இலக்கியம், அறிவியல், கணிதம், வரலாறு, கணிப்பொறி என அனைத்து துறைகளிலும் உலகளாவிய மேதைகளை உருவாக்கிய ஒரே நகரம் கும்பகோணமே..!
மேலைக்கூற்றம்
முதலில் குடந்தை என்ற சொல்லுக்கு கும்பகோணம் என்பது பொருள்.
கி.பி இரண்டாம் நூற்றாண்டில் குடந்தைக்கு மேலைக்கூற்றம் என்று பெயர்.
ஒரு ஆறு கடலுடன் கலக்கும் இடத்திற்கு பெயர் டெல்டா. இதை வடமொழியில் கோண மண்டலம் என்றும் தமிழில் குடநாடு என்றும் கூறுவர். இந்த பகுதி மிகவும் வளமுடையதாக இருக்கும். இவ்வாறு வளமுடையது காவிரி டெல்டா பகுதி. இது முக்கோண வடிவத்தில் இருக்கும். இப்பகுதியின் முனையில் இருக்கும் முதல் ஊர் குடந்தை.
குட=தமிழில் மேற்கு என்று பொருள்.
மூக்கு =முனை
காவிரி,அரசலாறு பிரியும் இடத்தில் மேற்கே முதலில் இருக்கும் ஊர் குடந்தையே.
குடமூக்கு என்ற பெயரில் 'ஐ' விகுதி சேர்த்து காலப்போக்கில் குடந்தை என்றானது.
No comments:
Post a Comment